மருத்துவமனையில் பாட்டி இறந்த விரக்தி பேரன் ரகளை
சென்னை, காமராஜர் சாலை, சத்தியா நகரை சேர்ந்தவர் தீனா, 19. அவரது பாட்டி ராணி, 50, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மின்விசிறிக்கான, ‘ஸ்விட்ச்’யை போட்டபோது, மின்சாரம் தாக்கி, மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட பேரன், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, பாட்டி நேற்று மதியம் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பேரன் தீனா, மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை செய்தார். அவரை பிடித்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.