ஆறாக ஓடும், கழிவுநீர் கண்டுக்கொள்ளாத குடிநீர் வாரிய புகார் பெட்டிசாலையில்
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் கண்டுக்கொள்ளாத குடிநீர் வாரியம்
கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜூனியர் குப்பண்ணா உணவகம் அருகே, பாதாள சாக்கடையில் மூன்று நாட்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீர் தெறிப்பதால், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடை அடைப்பை சீரமைப்பதுடன், அப்பகுதி முழுதும் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும்.
– ராஜன், கோடம்பாக்கம்