ஏடிஎம் மிஷினில் பணம் செலுத்தும் காலி பெட்டி கிடந்ததால் திருவொற்றியூர் சாலையோரம் பரபரப்பு
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே கே.சி.பி சாலையோரம் ஏடிஎம் மிஷினில் பணம் போட பயன்படுத்தும் காலி பெட்டி கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெட்டியை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இந்த காலி பெட்டியை சாலையோரம் போட்டது யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். ஏடிஎம் மிஷினில் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு, பெட்டியை மட்டும் கொண்டு வந்து வீசி விட்டார்களா அல்லது போலீசாருக்கு பயந்து காயலான்கடையிலிருந்து கொண்டு வந்து சாலையில் வீசி விட்டார்களா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.