9 பயணிகள் படுகாயம் மாநகர பேருந்து மீது லாரி மோதி விபத்து
சென்னை: புரசைவாக்கத்தில் இருந்து பிராட்வே நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, ராஜா அண்ணாமலைபுரம் சாலையில் இருந்து ஈவெரா சாலையில் திரும்பிய போது, கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, மாநகர பேருந்து மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த பட்டாளம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்த காளிநாகராஜன் (46), புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த சந்தோஷம் (48), ஓட்டேரி குளக்கரை சாலையை சேர்ந்த விமல்ராஜ் (50), மாநகர பேருந்து நடத்துநர் பட்டாளம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (51) மற்றும் லாரி ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஏழுமலை (33) உள்பட 9 பேர் காயமடைந்தனர். இவர்களை, அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.