ஒரு மணி நேரம் திக்… திக் அறுந்து விழுந்த மின் கம்பி
நெற்குன்றம்,கோயம்பேடு சந்தை மற்றும் மதுரவாயல் — பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாக நெற்குன்றம் மாதா கோவில் தெரு உள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு வரும் வியாபாரிகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நெரிசலை தவிர்க்க இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
நேற்று காலை, இச்சாலையில் உள்ள மின் கம்பி திடீரென சாலை நடுவே அறுந்து விழுந்தது. வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து அப்பகுதியில் உள்ள மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
ஆனால், அறுந்து விழுந்த மின் கம்பி ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அகற்றப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணம் மேற்கொண்டனர்.
போக்குவரத்து நெரிசலால், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர் மற்றும் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர்.