ஓட்டுனர் கொலை குடிபோதை தகராறு
குன்றத்துாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஓட்டுனர், தலையில் கல்லை துாக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். தப்பிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குன்றத்துார் ஒண்டி காலனி, அக்னீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய், 29; லோடு ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தினார்.
அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், பெரிய கல்லை துாக்கி விஜயின் தலையில் போட்டு, கொலை செய்து விட்டு தப்பினர்.
சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே, கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.