வாகனங்கள் பறிமுதல் ஆவடியில் ஏலம்

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்கில், 35 இருசக்கர வாகனம், 5 மூன்று சக்கர வாகனம் மற்றும் 3 நான்கு சக்கர வாகனம் என, மொத்தம் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வாகனங்கள், அரசாணை 41ன்படி, டிச., 12ம் தேதி, ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன.

ஏலம் கேட்க வருபவர்கள், இருசக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய், மூன்று சக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

அதற்கான ‘டோக்கன்’ அன்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை வழங்கப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகைஉடன், இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத விற்பனை வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.

ஏலத்தில் பங்கேற்போர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள சான்று கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *