ஒன்றிய அரசு நிதி தர மறுப்பது நியாயமானதல்ல-ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல. ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டின் 2வது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், ஒன்றிய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.