சூரரைப்போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 10 விருதுகள் குவித்த தமிழ் சினிமா

சூரைப் போற்றுபடத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , சிறந்த நடிகைக்காக தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த பின்னணி இசைக்கான விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் ஆகியப் பிரிவுகளிலும் சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்திற்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வசனத்திற்கான தேசிய விருது மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சிறந்த நடிகர்- சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யாதன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் (இந்தி); நடிகர்: அஜய் தேவ்கான்

சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) கதை வசன எழுத்தாளர்: ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா ;

மண்டேலா (தமிழ்); வசனகர்த்தா: மடோன் அஷ்வின் சிறந்த துணை நடிகை சிவரஞ்சனியும்

இன்னும் சில பெண்களும் (தமிழ்); நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலி

சிறந்த இயக்குநர்; ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு – ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்)

சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ

சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம்

சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி

சிறந்த கன்னட படம்: டோலு

சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர்

சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக்

சிறந்த அசாமிய திரைப்படம்: பிரிட்ஜ்

சிறந்த சண்டை காட்சிக்கான விருது: .அய்யப்பனும் கோஷியும்

சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு)

சிறந்த பாடல் வரிகள்: சாய்னா (இந்தி)

சிறந்த இசை -ஆலா வைகுந்தபுரமுலு (தெலுங்கு) இசையமைப்பாளர் (பாடல்கள்): எஸ். தமன் சூரரைப் போற்று (தமிழ்) – இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் குமார்

சிறந்த ஒப்பனை கலைஞர்: டி.வி.ராம்பாபு (நாட்டியம் தெலுங்கு படம்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் இந்தி படம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: அனீஸ் நாடோடி (கப்பேலா (சேப்பல்) மலையாள படம்)

சிறந்த படத்தொகுப்பு: எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும் – தமிழ் படம்

சிறந்த ஒலிப்பதிவு: ஜோபின் ஜெயன் (டோலு (கன்னடம்); லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் (ஒத்திசைவு ஒலி படங்களுக்கு மட்டும்)அன்மோல் பாவே (மி வசந்தராவ் ஐ ஆம் வசந்தராவ் (மராத்தி படம்)விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ சங்கர் (மாலிக் – மலையாள படம்; இறுதிக்கலவை டிராக்கின் மறுபதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *