உயர்கல்வி பயில திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பியர்கள் கல்விக் கட்டணங்களின்றி கல்வி பயில விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
உயர்கல்வியை தொடர விரும்பும் திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என்றுதமிழக அரசின் சமூல நலத்துறை சார்பில் கடந்த மார்ச் 15-ம் தேதிஅரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பியர்களும் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்வி படிப்புகள் பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பியர்கள், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.