வயநாடு நிலச்சரிவு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி
கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 410-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம், நயன்தாரா -விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், மோகன்லால் ரூ.25 லட்சம் மற்றும் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி, அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் இணைந்து ரூ.1 கோடி, நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான் என பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரபாஸ், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.