இஸ்ரோ உதவியுடன் 4730 கோடி ஊழல் அமலாக்கதுறை கண்டுபிடிப்பு..! விசாரணை வளையத்தில் துரை முருகன்….

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அது மட்டுமில்லாமல் திமுக விற்கும் பாஜகவிற்கு சரியான மோதல் கொள்கை ரீதியாகவும், கொள்ளை ரீதியாகவும் பல்வேறு சட்ட பஞ்சாயத்துகள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

முதலில் செந்தில் பாலாஜி யுடன் நடந்து அமலாக்கத்துறை கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறை வைத்து இருக்கின்றனர். அதனால் அமலாக்கத்துறை கைது என்றால் கொஞ்சம் அரசியல் வாதிகள் ஆடிபோகி உள்ளனர். ஏன் என்றால் வலுவான முதல்வர் என்று அழைக்கபடும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ளார்.அதனால் அமலாக்கத்துறை என்றால் பெரும் பயம் எல்லா அரசியல்வாதிக்கு வந்து இருக்கிறது. அமலாக்கதுரை அரசியல் சாயத்தோடு இயங்குகிறது என்பது வேறு விமர்சனம்.

ஆளும் திமுக அரசுக்கு சட்ட விரோத வருமானம் என்பது நீர்வளத்துறையின் கீழ் இயங்கும் மணல் அள்ளி விற்பனை செய்வது தான். முதல் இது பொதுபணிதுறையில் தான் இருந்தது. இப்ப அதை நீர் வளம் பிரித்து துரை முருகன் அவர்கள் வசம் அரசு ஒதுக்கியுள்ளது. அவர்தான் மணல் எடுக்க அனுமதி கொடுத்த துறை மந்திரி.

நீர் வளத்துறை 4.05 லட்சம் யூனிட் மணல் எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறது.
அரசுக்கு அதன் மூலம் 36.45 கோடி வருமானம் வந்திருக்கிறது அரசின் தகவல்.

விஞ்ஞானமும் ஊழலும்…

திமுக விற்கு எப்போதும் விஞ்ஞான முறைப்படி ஊழல் பண்ணும் திறமை உண்டு என்று ஒரு பொரணி பேச்சு இருக்கிறது. அதனால் இந்த முறை மணல் திருட்டை விஞ்ஞான முறைப்படி கண்டுபிடிக்க திட்டமிட்ட
மத்திய அரசு கடந்த ஒரு வருடமாக அமலாக்கதுறையை விசாரிக்க வைத்தது. கடைசியில் இஸ்ரோ உதவியுடன் இந்த மணல் திருட்டை கண்டுபிடிக்க இருக்கிறார்கள். அதாவுது அரசின் அனுமதியை விட 27.70 லட்சம் யூனிட் மணல் எடுத்து விற்று இருக்கிறார்கள். 4730 கோடி ஊழல் நடந்து இருக்கிறது. அதை மாவட்ட ஆட்சியர்கள் தடுக்கமால் விட்டு இருக்கிறார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வரை பல்வேறு மட்டங்களில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது என்ற அறிக்கையை தற்போது டிஜிபிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.அதை சில முக்கிய மீடியாக்கள் செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஒப்பந்தரகளின் சொத்துக்கள் முடக்கம்…

ஒரு வருடம் நடத்திய தொடர் விசாரணையில் மணல் கொள்ளையர்கள் சுருட்டிய தொகை 4730 கோடி என அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன்,ரத்தினம்,கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான 130 கோடி ரூபாய் சொத்துக்களும், 35 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த படி 490 ஏக்கரில் மணல் அள்ள அனுமதி பெற்று 2450 ஏக்கர் அளவில் அள்ளி விற்று உள்ளனர் என உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *