மலையாள இயக்குனரின் படத்தில் யோகி பாபு..
ஈடன் பிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரிக்க, சஜின் கே.சுரேந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘வானவன்’. யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லட்சுமிப்பிரியா சந்திரமவுலி, மாஸ்டர் சக்தி ரித்விக், ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன், கல்கி ராஜா நடித்துள்ளனர். வழக்க மான யோகி பாபு காமெடியுடன் ஃபீல்குட், பேண்டஸி ஜானரில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் படம் உருவாகியுள்ளது.
மலையாளத்தின் முதல் வெப்சீரிஸான ‘மாஸ்குரேட்’ என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்த சஜின் கே.சுரேந்திரன், ‘வானவன்’ படத்தின் மூலமாக தமிழில் இயக்குன ராக அறிமுகம் ஆகிறார். பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் ஸ்கிரிப்ட் எழுதி இருக்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்க, கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். மதுரை மற்றும் சென்னையில் முழு படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது.