சென்னை, அயனாவரத்தில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். சென்னை,

சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் ரவுடி பெண்டு சூர்யா என்பவர் தலைமறைவானார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அயனாவரம் நியூ ஆவடி சாலையில் திடீரென பெண்டு சூர்யா, கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினார். கத்திக்குத்தில் காவலர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டு பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் ரவுடிகள் துரை, சோமுவை தொடர்ந்து சென்னையிலும் போலீசார் ரவுடியை சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *