வயதான மனுதாரரை மதிக்காத காவல் ஆய்வாளர் … புகார் மனுவை வாங்காமல், படிக்காமல், கோல்மால் என்று கண்டுபிடித்த அதிசய ஆய்வாளர்… தேனி அருகே அதிசயம்… டிஜிபி அவர்களின் பார்வைக்கு…
தேனி அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் ( தேனி காவல் நிலையம் அல்ல). ஆய்வாளராக பணியாற்றும் ஒரு ஆய்வாளர் கடவுள் பெயர் கொண்ட அவர், புகார் மனுவை கொடுப்பவர்களை தங்கள் தெரு நாயை விட கேவலமாக நடத்துகிறார். அவருக்கு அந்த காவல் நிலையம் அவருடைய தனிப்பட்ட சொத்து என நினைத்து விட்டார்.
அங்கே புகார் கொடுக்க வருபவர்களையும் அங்கே பணியாற்றும் ஊழியர்களையும் தனது அடிமை போல் நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டு பத்திரம் அசலை தொலைதுவிட்டார் சுமார் 70 வயதான முதியவர்… அது தொடர்பாக ஆன்லைனில புகார் அளித்துள்ளார் . அன்றே நேரடியாகவும் சென்று மனு கொடுத்துள்ளார். அப்போதும் மனுவை யாரும் வாங்கவில்லை. இங்கே இந்த மனுவெல்லாம் வாங்க மாட்டோம் என்று அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். இந்த விசயம் நடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு மேற்படி புகார் சம்பந்தமாக டிஜிபி சொல்லியபடி ஆவணங்களை எடுத்து மேற்படி புகார்மனுவை நேற்று இரவு அந்த 70 வயது முதியவர் பத்திரிக்கையாளர் துணைக்கு இருக்கிறார் என்ற எண்ணத்தில் கொடுத்தார். அந்த முதியவரை குறைந்த பட்சம் மரியாதை கூட தராமல் நாயை விட கேவலமாக நடத்தி புகார் மனுவை பெற்றுகொள்ளமளும், படிக்காமாலும், அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார். நீங்கள் போய் உயர்நீதி மன்றத்தில் வாங்குங்கள் என்று அனுப்பிவிட்டார். ஆய்வாளர் அவருக்கு, காவல்துறையின் குறைந்த பட்ச் அறிவு இருக்கா என்றுதான் கேட்க வேண்டும். ஒரு புகார்மனுவை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த புகார் சம்பந்தமாக புகார் மனு ரசீது தர வேண்டும்.. அந்த புகாரை விசாரித்து கோரிக்கை சரியாக இருந்தால் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தாராளமாக நிராகரிக்கலாம். அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டுவிட்டு அந்த புகாரை வாங்கிபடிக்காமல்,என்னவென்று விசாரிக்காமல் இப்படி வயதானவர்களை அவமானப்படுத்துவது ஏற்புடையதா?. இது சம்பந்தமாக அந்த பகுதி துணை காவல் கண்காணிப்பாளர் அவரிடம் தெரிவித்தோம் அவர் அந்த புகார்மனுவை என்னிடம் தாருங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதிப்புடன் தெரிவித்தார்…
மதிப்புக்குரிய டிஜிபி பொது மக்களின் நண்பன் என்று காவல்துறையை காட்டிக்கொள்ள வரவேற்பு அறை என்ற ஒன்றை உருவாக்கி தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து தான் பார்க்கிறார். ஆனால் இது போன்ற காவல் ஆய்வளருக்கு தற்போது வரை புரியவில்லை என்பதுதான் எதார்த்தம். நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் உயர்நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று வேலையை ஒதுக்கினால் ஊருக்கு ஒரு நீதிமன்றம் கட்டினாலும் பத்தாது. ரிட் மனுவில் நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வழக்குகள் எண்ணிக்கை குறையும்… நீதிமன்றங்களுக்கும் நற்பெயர் உண்டாகும்.