வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ராஜா மோகன் (வயது 35). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி,நெல்லூா் மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார்.
இதை அடுத்து நெல்லூர் மகளிர் போலீசார், ராஜாமோகன் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு அவரைத் தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.
இதையடுத்து நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு,ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.
இந்நிலையில் ,சிங்கப்பூரில் இருந்து,விமானம் மூலம் சென்னை வந்தார். பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்பொழுது ராஜ்மோகன் தேடப்படும் குற்றவாளி என்று தெரிய வந்தது. இதை அடுத்து ராஜமோகனை ஒரு தனி அறையில் வைத்தனர். நல்லூர் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.