சென்னை பிறந்த தினத்தையொட்டி சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகள்

சென்னை பிறந்த தினத்தையொட்டி ஓவியம், புகைப்படம், குறும்படம், சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடக்கிறது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நம் சென்னையின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22-ந்தேதியை கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்காக ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி மற்றும் குறும்பட போட்டி ஆகியவற்றை நடத்தவுள்ளது.

ஓவியப் போட்டியில் தேசியக் கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும், புகைப்படப் போட்டியில் சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்தும், குறும்பட போட்டியில் சென்னை என்ற தலைப்பில் குறும்படம் எடுத்தும் அனுப்பலாம். சமூக வலைதள ரீல்சில் சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் சோசியல் மீடியா ரீல்ஸ் இயக்கி அனுப்பலாம். சிறந்த ரீல்ஸ்க்கு பரிசு உண்டு.

பொதுமக்கள் தங்களது தகவல்களை shorturl.at/dLU89 என்ற இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்து படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம். போட்டிகள் பற்றிய அறிவிப்புகளுக்கு, சென்னை மாநகராட்சியின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை பின்தொடரலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *