தபால்தலை கண்காட்சி பி.ஜி.மல்யா தொடங்கி வைத்தார்

சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2 நாட்களுக்கான தபால்தலை கண்காட்சியை , தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்யா நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று (வியாழக்கிழமை ) வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில், முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், சிறப்பு கவர்கள், அஞ்சல் பட அட்டைகள் மற்றும் இதர அஞ்சல் எழுதுபொருட்கள் மூலம் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேயின் வளர்ச்சி மற்றும் சுதந்திரப்போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

194 தபால் தலைகள், 93 சிறிய அளவு தாள்கள், 85 முதல் நாள் அட்டைகள் மற்றும் 113 சிறப்பு அட்டை கள் என மொத்தம் 505 கண்காட்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே தலைமை யகத்தின் நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டதன் நினைவாக சமீபத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை யும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *