திருநின்றவூர் பஸ் நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

திருநின்றவூர், சி.டி.எச்., சாலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக திருநின்றவூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாமல், குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள கழிப்பறை பல மாதங்களாக பயன்பாடின்றி மூடியே கிடந்தது. ஆழ்துளை கிணறு, பழுதாகி ஓராண்டு ஆகியும் சரி செய்யவில்லை. தண்ணீர் தொட்டியும் ஆபத்தான வகையில் காட்சியளித்தது.

இதனால் பயணியர் கடும் அவதியடைந்து வந்தனர். குழந்தைகள் பேருந்து நிலைய மறைவில் சென்று இயற்கை உபாதை கழிக்கும் அவலம் ஏற்பட்டது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இது குறித்து, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பறை சீரமைக்கப்பட்டது. இதனால், பயணியர் நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *