பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

புதுடில்லி: பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே நேற்று விண்வெளி தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய வீடியோ இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது: நிலவின் தென் துருவத்தில் நமது விண்கலம் தரையிறங்கியது மகத்தான சாதனை. பலரின் கனவுகளை சந்திரயான் நிலவுக்கு சுமந்து சென்றது. 34 நாடுகளுக்காக 400க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை நாம் விண்ணில் ஏவியுள்ளோம்.

இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவருடன் போட்டியிடுவது அல்ல. பல்வேறு நாடுகளுடன் இணைந்து பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்கிறோம். செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து இந்தியா வரலாறு படைத்துள்ளது.

2023ல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியா அமைக்க உள்ளது. இந்தியா- நாசாவின் கூட்டு நடவடிக்கையில் இந்திய வீரர் விரைவில் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பயணம் ஒத்திவைப்பு

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக குரோஷியா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய இருந்த நிலையில், அனைத்து வெளிநாட்டு பயணங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *