ரூ.1000 கிடைக்காதவர்கள்.. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? வெளியான அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்கள் முறையான ஆவணங்களுடன் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதிவாய்ந்த பெண்களை சேர்க்கும் வகையில் 9000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது சுமார் 1 கோடியே 34 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள் நடைபெறும் எனவும், அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேராக மாநகராட்சி அலுவலகம் அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யலாம். ஆனால் ஏற்கனவே விண்ணபித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேராக மாநகராட்சி அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *