காவலர் குடியிருப்புக்கள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காவலர் குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பீட்டில் 253 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைபோல சென்னை, புதுப்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.