பயனாளிகள் 175 பேருக்கு நலத்திட்ட உதவி

ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 175 பயனாளிகளுக்கு 52.35 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், அமைச்சர் நாசர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், எம்.பி., சசிகாந்த் செந்தில், ஆதிதிராவிடர் நல அலுவலர், தாட்கோ மேலாளர், ஆவடி மேயர் மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *