போலீசாரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை பராமரிக்க மென்பொருள்
எழும்பூரில் காவலர் மருத்துவமனையில், உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவுகள் உள்ளன. இங்கு காவலர், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், எழுத்து வடிவில் பரமாரிக்கப்பட்டு வந்தததால், தொடர் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், இங்கு சிசிகிச்சை பெறுவோரின் உடல் நலன் சார்ந்த அறிக்கைகளை பராமரிக்க, 46 லட்சம் ரூபாயில், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில்,’மென்பொருள் வாயிலாக பரிசோதனை விபரங்கள் பதிவு செய்வது, காவலர்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தாருக்கு எத்தகைய நோய் தாக்கம் அதிகம் உள்ளது என்பதை அறியவும், அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்யவும் உதவியாக உள்ளது’ என்றனர்.