பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோத்சவம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தில் நேற்று சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோத்சவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டிற்கான பிரம்மோத்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடந்தது. இரவு சிம்ம வாகன புறப்பாடு நடந்தது.
விழாவின் மூன்றாம் நாளான இன்று, கோபுர தரிசனத்துடன் கருட சேவை உத்சவம், காலை 5:15 மணிக்கு நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:45 மணிக்கு அம்ச வாகன புறப்பாடு நடக்கிறது.