மலேஷியா சென்ற சட்ட மாணவர்கள்
தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை, மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், சர்வதேச பல்கலை பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 20 மாணவர்களுடன் பேராசிரியர்கள் விஜயலட்சுமி, முஜாகித் உல் இஸ்லாம் ஆகியோர், மலேஷியா நாட்டின் தேசிய சட்ட பல்கலைக்கு நேற்று, ஒரு வார பயணமாக சென்றுள்ளனர்.
மற்ற பல்கலைகளில் பாடம் கற்பிக்கும் முறையை பற்றி அறியவும், சர்வதேச சட்டங்கள் குறித்த புரிதலை மேம்படுத்தவும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, சட்டப் பல்கலை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு, 20 மாணவர்கள், குஜராத் சட்ட பல்கலைக்கு சென்று வந்தனர்.