நங்கநல்லுாரில் 2 நாள் ஆதார் சிறப்பு முகாம்
இந்திய அஞ்சல் துறையுடன், ஆலந்துார் மண்டலத்தின், 167வது வார்டு தி.மு.க., இணைந்து, இரண்டு நாள் சிறப்பு ஆதார் முகாமை, நாளை நங்கநல்லுாரில் உள்ள, 100 அடி சாலை, வார்டு கவுன்சிலர் உறுப்பினர் அலுவலகத்தில் நடத்துகின்றன.
இம்முகாமில், 18 வயதிற்கு உட்பட்டோர் புதிதாக ஆதார் எடுக்க, பெற்றோர் ஆதார் கார்டு அவசியம். புதிய கார்டுகள் இலவசமாக எடுக்கப்படுகின்றன.
பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் கொண்டு வர வேண்டும்.
பிறந்த தேதி மாற்றத்திற்கு பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
முகவரி மாற்றத்திற்கு ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், காஸ் ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும்.
ஆதார் திருத்தம் செய்ய, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாளை முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் இச்சேவையில், நங்கநல்லுார் சுற்றுவட்டாரப் பகுதிவாசிகள் பயனடையாலாம்.