சோமங்கலத்தில் சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

அய்யப்பன்தாங்கல் போக்குவரத்து பணிமனையில் இருந்து, சோமங்கலம், நல்லுார், குன்றத்துார் வழியே, போரூருக்கு தடம் எண் 89ஏ அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

சோமங்கலம் பேருந்து நிலையத்திற்கு, காலை 10:40 மணிக்கு வரும் இந்த பேருந்து, சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணியர் கூறியதாவது:

சோமங்கலத்தில் இருந்து, 11:00 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்தை, ஓட்டுநர், நடத்துநர்கள் தங்கள் இஷ்டம் போல், 11:30 மணிக்கு மேல் இயங்குகின்றனர்.

மேலும், பேருந்து புறப்படும் நேரத்தை கேட்டால், ஓட்டுநர் சரியாக பதில் கூறாமல், பயணியரிடம் ஒருமையில் பேசுகிறார்.

இந்த பேருந்தை சரியான நேரத்தில் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *