விமான பணிப்பெண் தற்கொலை
குன்றத்துார், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷா வர்மா, 24; சென்னை விமான நிலையத்தில், ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான பணிப்பெண்ணாக வேலை செய்தார்
அபிஷா வர்மாவின் தந்தை இறந்துவிட்டார். தாய், வேறு ஒரு நபரை திருமணம் செய்து துபாய் சென்றுவிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தாயை காண விரக்தியில் அபிஷா இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் தங்கியிருந்த, குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.