2.46 லட்சம் பேருக்கு பணி ஆணை அமைச்சர் தகவல்

நந்தனம், அரசு கலை கல்லுாரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது.

முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், துவக்கி வைத்து பேசியதாவது:

இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 208 நிறுவனங்கள், திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்குபெற்றன.

சென்னை மாநில கல்லுாரியில், 2023 ஜூலையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 1.50 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தமிழக அரசு பதவி ஏற்றது முதல் சிறிது, பெரிது என, 2,028 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளன. இதில், 2.46 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பகுதிநேர பணியிடங்கள் வழங்கும் நிறுவனங்கள் பங்கு பெற்றன. சைதாப்பேட்டையில், 40 கோடி ரூபாயில், 484 மாணவர்கள் தங்கும், 121 அறைகள் கொண்ட விடுதி மற்றும் நந்தனம் கல்லுாரியில் 5.70 லட்சம் ரூபாயில் கட்டிய கலையரங்கம் விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *