தாம்பரம் , பல்லாவரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்; எம் எல் ஏக்கள் ப ங்கேற்பு
தாம்பரம், மார்ச் 30: மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூ.4034 கோடியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிச்சூர் பகுதியில் ஒன்றிய துணை செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகதீஸ்வரன், ஜனனி சுரேஷ்பாபு, ஊராட்சி மன்ற துணை தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய நிர்வாகிகள் சக்தி, மஞ்சுஜெயபாலன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுனில் மேத்யூ, கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, புனித தோமையார் மலை ஒன்றிய திமுக சார்பில் பொழிச்சலூர் பேருந்து நிலையம் அருகில் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றியச் செயலாளர் ரவி (எ) விவேகானந்தன், பகுதி செயலாளர் திருநீர்மலை த.ஜெயக்குமார், தொமுச பொன்ராம், ஒன்றிய நிர்வாகிகள் செல்வராஜ், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் வனஜா, மாவட்ட கவுன்சிலர் மனோகர், பம்மல் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சவுமியா, துணைத் தலைவர் பிரசாத், இளங்கோவன், மாரிமுத்து மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோ.ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.