‘பலே ‘ பைக் திருடன் கைது
சென்னை:சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் செல்வம், 56. எழும்பூர் ஆதித்தனார் சாலை – நாராயண நாயக்கன் தெரு சந்திப்பில் நிறுத்தி வைத்திருந்த இவரது பைக், கடந்த 8ம் தேதி திருடு போனது.
எழும்பூர் போலீசாரின் விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான், 33, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், எட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது ராணிப்பேட்டையில் வழக்குகள் உள்ளன.