அடகு கடை ஓனர்களை குறிவைத்து மோசடி ஆட்டோ டிரைவர் சிக்கினார்

தண்டையார்பேட்டை:பெரம்பூர், ஜானகிராமன் நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 44; அடகு கடை உரிமையாளர்.

இவரை, 26ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவர், தனியார் வங்கியில் 62,000 ரூபாய்க்கு நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்க உதவினால் திருப்பிய நகைகளை பிரகதீஸ்வரனிடம் அடகு வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய பிரகதீஸ்வரன், நேற்று பிரகாஷுடன் தண்டையார்பேட்டை, ஜி.ஏ., சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று, பிரகாஷின் வங்கி கணக்கில் 62,000 ரூபாய் செலுத்தினார்.

பிரகாஷ் வைத்த அடகு நகைகள் குறித்து வங்கி ஊழியர்களிடம் பிரகதீஸ்வரன் கேட்ட போது, பிரகாஷ் தங்க நகைகள் ஏதும் அடகு வைக்கவில்லை என்பது தெரியவந்தது. உடனே பிரகதீஸ்வரன் இது குறித்து பிரகாஷிடம் கேட்டபோது, நகைகள் எதுவும் வங்கியில் அடகு வைக்கவில்லை என்றும், பணத்தை திரும்ப தருவதாகவும் கூறிவும், ‘ஜிபே’ வாயிலாக 62,000 ரூபாயை திருப்பி அனுப்பி விட்டு தலைமறைவானார்.

பிரகாஷின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பிரகதீஸ்வரன், இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், அடகு கடை உரிமையாளர்களான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கோகுல் என்பவரிடம் 90,000 ரூபாய்; கொருக்குப்பேட்டை அஜய் என்பவரிடம் 73,000 ரூபாய்; கோயம்பேடு கார்த்திக் என்பவரிடம் 64,000 ரூபாய் என, இதேபோன்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது

விசாரித்த போலீசார், பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பிரகாஷ், 39, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *