விமான நிலையத்தில் ‘ரன்வே’ பராமரிப்புக்கு நவீன வாகனம்
சென்னை, சென்னை விமான நிலையத்தில், நாளொன்றுக்கு 400 க்கும் மேலான விமான நகர்வுகள் உள்ளன. அதிகமான விமானங்கள் தரையிறங்கும் நிலையில், ஒடுபாதை பராமரிப்பு மிக அவசியம்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஒடுபாதையிலும், விமானங்கள் தரையிறங்கும் போது, ‘கிரீப்பிங்’ என்ற உராய்வு தன்மை சற்று குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், தரையிறங்கும் விமானங்களின் சக்கரங்கள், சறுக்கிக் கொண்டு ஓடுவதால், விமானங்களுக்கு சிறிதாக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவற்றை சரி செய்யவும், ஒடுபாதையில் தேவையான பராமரிப்பை மேற்கொள்ளவும், சென்னை விமான நிலையத்திற்கென, ஏ.ஏஸ்.எப்.டி., என்ற ரன்வே பராமரிப்பு வாகனம், 1.31 கோடி ரூபாயில் வாங்கப்பட்டு, தற்போத செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால், விமான நிலைய ரன்வே பராமரிப்பு பணிகள் சுலபமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.