கம்பு ஊன்றி தாண்டுதலில் சென்னை மாணவன் வெள்ளி
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், நான்காவது அகில இந்திய ஜம்பஸ் எனும் கம்பு ஊன்றி தாண்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சமீபத்தில் நடந்தது.
போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, ஏராளமான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், ஆண்களுக்கான கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில், தமிழக வீரரான டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி மாணவன் கவுதம், 4.80 மீ., தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.
மற்றொரு தமிழக வீரர் கோகுல்நாத் 7.90 மீ., தாண்டி முதலிடத்தை பிடித்து, தங்கம் வென்றார். போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற வீரரை, கல்லுாரியின் முதல்வர் சந்தோஷ்பாபு பாராட்டினார்.