இந்திராவுக்கு சிலை அமைக்க இடம் தேர்வு

சென்னை, முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு சிலை அமைக்க, சென்னை வேளச்சேரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

* காங்., – அசன் மவுலானா: கடந்த 2024- – 25ம் ஆண்டு பட்ஜெட்டில், இந்திராவுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தீர்கள். ஆனால், இதுவரை சிலை அமைக்கப்படவில்லை.

* அமைச்சர் சாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, செய்தித் துறை சார்பில், சென்னையில் இந்திராவுக்கு சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம், வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *