கோடை கால கலை பயிற்சி கண்ணகி நகரில் துவக்கம்

கண்ணகி நகர், கண்ணகி நகர், முதல் தலைமுறை கற்றல் மையம் சார்பில், கோடை விடுமுறையில் பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியருக்கான இலவச கலை பயிற்சி நடைபெற உள்ளது.

இதில், பொம்மலாட்டம், கிட்டார், கீ-போர்டு, கரகம், பறை, ஒயிலாட்டம், மயிலாட்டம், குச்சிபிடி, நடனம் உள்ளிட்ட பயிற்சிகளுடன், சான்றிதழ் வழங்கப்படும்.

இதன் துவக்க விழா, நேற்று நடந்தது. இதில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது

கோடை விடுமுறை என்பது, மாணவ – மாணவியரின் தனித்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு. இதில், அறிவு திறன், செயல் திறனை அரங்கேற்ற முடியும்.

பிடித்தமான கலையை கற்க, இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். படிப்பும், தனித்திறனும் சேர்ந்தால், நினைத்த இலக்கை அடைய முடியும்.

இவர் அவர் பேசினார்.

இலவச கலை பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், 044 – -2458 1021 என்ற எண்ணில், தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என, அதன் நிர்வாகி மாரிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *