பொது – பணப்பையை ஒப்படைத்த ஓட்டுநர்களுக்கு பாராட்டு
அண்ணா நகர், அண்ணா நகர், ஏழாவது பிரதான சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ரிஜீஸ், 51, சிவா, 32, ஆகிய இரு ஓட்டுநர்களும், நேற்று காலை சவாரிக்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு, சவாரிக்காக வந்த தம்பதியின் கைப்பை, தவறி சாலையில் விழுந்து கிடந்தது. அதை எடுத்து இருவரும் சோதித்தபோது, 52,000 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இருவரும், அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு சென்று, பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதேசமயம், நேபாள நாட்டை சேர்ந்த சக்தி – சந்திரா தம்பதியர், பணப்பையை தவறவிட்ட பகுதியில் இருந்த போலீஸ் பூத்தில், சம்பவம் குறித்து தெரிவித்தனர்.
விசாரணையில், நேபாள தம்பதி, 12வது சாலையில் தங்கி காவலராக பணிபுரிவதும், நகை வாங்குவதற்காக பணத்துடன் பிராட்வேக்கு செல்லும் போது, பணத்தைத் தவற விட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, எஸ்.ஐ.,க்கள் ரஜித்குமார் மற்றும் ஜெயபிரகாஷ் முன்னிலையில், ஆட்டோ ஓட்டுநர் இருவர் வாயிலாக, பணப்பையை நேபாள தம்பதியிடம் ஒப்படைத்தனர். நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் பாராட்டினர்.