வீட்டுமனை பட்டா வழங்கல் பணி திருவள்ளூர் கலெக்டர் விசாரணை
செங்குன்றம், நாரவாரிக்குப்பத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் பட்டா கோரி மனு அளித்திருந்தனர். சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற நிலங்களில் வசித்து வருவோருக்கு பட்டா வழங்கப்படும் என, அறிவித்திருந்தார்.
இதனால், அந்தந்த மாவட்ட நிர்வாகம், தகுதியான இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பகுதியில், நேற்று காலை ஆய்வு செய்தார்.
அப்போது 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் குடும்பங்கள் குறித்த ஆவணங்களை பார்வையிட்ட கலெக்டர், இடத்தின் உரிமையாளர்களிடம் நேரடி விசாரணை நடத்தினார்.
அப்போது, ”வீடு கட்டி வாடகை வசூலிப்பவர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்த்து, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட தகுதியான இடம் மற்றும் பயனாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.