சைக்கிளில் சென்னை வந்த சி. எஸ் .ஐ. எப். , வீரர்கள்
செங்குன்றம், கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின், 56வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், பாதுகாப்ப வீரர்கள் சைக்கிள் பேரணியை துவக்கியுள்ளனர்.
கிழக்கில் மேற்கு வங்கம், மேற்கில் குஜராத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி, கன்னியாகுமரியில் வரும் 31ம் தேதி நிறைவடைகிறது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், 20க்கும் மேற்பட்டோர் வந்த சைக்கிள் பேரணி, ஆந்திர மாநிலம் வழியாக, தமிழக எல்லை ஆரம்பாக்கத்திற்கு நேற்று வந்தடைந்தது.
அவர்களுக்கு சென்னை செங்குன்றத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை சார்பில் மலர் துாவி உற்சாக வரவேற்பு தரப்பட்டது. இவர்கள் எண்ணுார், புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி செல்ல உள்ளனர்.