கலெக்டர் அலுவலகத்தில் 28ம் தேதி நடக்கிறது முன்னாள் படை வீரர்கள் குறைதீர் நாள் கூட்டம்
சென்னை, மார்ச் 25: தமிழ்நாடு முதல்வர் 78வது சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களை தொழில் முனைேவாராக உருவாக்கிட “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி, முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரரின் விதவையர், மற்றும் ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள், முன்னாள் படைவீரரை சார்ந்த விதவை மற்றும் விவாகரத்து பெற்ற மகள் ஆகியோர் அதிக அளவில் பயன்பெறும் பொருட்டு பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை வாரியான தகவல்கள் வழங்கும் கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள 8வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்/ சார்ந்தோர் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.