வாலிபர்களை தாக்கிய 10 பேர் கும்பலுக்கு வலை
அரும்பாக்கம்:அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் எடிசன், மணிமாறன் ஆகியோர், மதுபோதையில் கோயம்பேடில் ஒரு ஹோட்டலில் நேற்று சாப்பிட சென்றனர்
மது போதையில் சொகுசு காரில் அங்கு வந்த 10 பேர் கும்பல், அவர்களுடன் திடீரென தகராறில் ஈடுபட்டது. அங்கிருந்த பைக்கை துாக்கி ஜோசப் எடிசன் மீது வீசியும், தலைகவசத்தால் மணிமாறனையும் தாக்கியது.
ஜோசப் எடிசனுக்கு எலும்பு முறிவும், மணிமாறனுக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வாலிபர்களை தாக்கிய கும்பலை, போலீசார் தேடுகின்றனர்.