ரங்கராஜபுரம் சுரங்கப் பாதையில் தினமும் ஏற்படும் நெரிசலால் அவதி
கோடம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டலம், ரங்கராஜபுரம் பிரதான சாலையில், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய சுரங்கப்பாதை உள்ளது.
கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளை இணைக்கும் விதமாக, இப்பாதை உள்ளது. தினம் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
காலை, மாலையில், ‘பீக்ஹவர்ஸ்’ சமயத்தில், ஒரே நேரத்தில் அதிகப்படியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் முன், பின் இயக்குவதில் சிரமம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே, காலை மற்றும் மாலை நேரத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, சுரங்கப்பாதை அருகே போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்து, வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.