ரூ.11 கோடியில் சமூக கூடம் மதுர வாயலில் பணி துவக்கம்
மதுரவாயல்:வளசரவாக்கம் மண்டலம், 147வது வார்டு விவேகானந்தர் தெருவில், மாநகராட்சி வார்டு அலுவலகம் எதிரே, மாநகராட்சி சமூக நலக்கூடம் உள்ளது.
மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், மிகவும் சேதமடைந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தவிர, இரவில் ‘குடி’மகன்களின் மதுக்கூடமாகவும் மாறியது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்திகள் வெளியான நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில், அதே சமூக நலக்கூடம் பகுதியில், இரண்டு தளங்களுடன் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது பணி துவங்கியுள்ளது.
முதல் தளத்தில் அரங்கு, இரண்டாம் தளத்தில் உணவு கூடம், கீழே வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது