பொது – உள்ளாடையில் நகை துகள் திருடிய ஊழியர் கைது
கிண்டி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள நகைக்கடையில், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த அலிஉசேன்தின், 26, என்பவர், நகை சரிபார்க்கும் பணி செய்தார்.
நேற்று முன்தினம், கழிப்பறை செல்ல முயன்ற இவர் மீது, அங்குள்ள காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்தபோது, 3 கிராம் நகை துகள்களை அவரது உள்ளாடையில் மறைத்து திருடியது தெரிந்தது
கடை மேலாளர் வெற்றிவேந்தன் புகாரில், கிண்டி போலீசார், அலிஉசேன்தின்னை கைது செய்தனர்.
★ஆலந்துாரைச் சேர்ந்த கபிலன், 20, கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு பேருந்தில் இருந்து இறங்கி வந்த இரண்டு பேர், கபிலன் மொபைல் போனை பறித்து தப்பி ஓட முயன்றனர்.
சக பயணியர் சேர்ந்து, இரண்டு பேரையும் பிடித்து, கிண்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பூந்தமல்லியைச் சேர்ந்த சூர்யா, 19, மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது. இரண்டு பேரையும், போலீசார் கைது செய்தனர்.