திருமண வீடியோ, எடிட்டிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, தமிழக அரசின், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, வரும் 26 முதல் 28ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
இதில், மூலப்பொருள், உபகரணங்கள் குறித்த பயன்பாடு மற்றும் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், பாம்பே பன், இனிப்பு ரொட்டி, க்ரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதேபோல், திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி, வரும் 25 முதல் ஏப்., 4ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, 10 நாட்களுக்கு நடக்கிறது.
புகைப்படம் எடுப்பதன் அடிப்படை, ஒளியமைப்பு, கலவை மற்றும் நுட்பங்கள், பாரம்பரிய புகைப்படம் எடுத்தல், திருமண போட்டோ எடுக்கும் நுட்பங்கள், ஆல்பம் வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சிகளை பெற, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு படித்த, 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன முகவரியை அணுகலாம்.
தவிர www.editn.in இணையதளம், 86681 08141, 86681 02600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.