மூதாட்டியின் போர்வைக்கு தீ வைத்த சிறுவர்கள் சிக்கினர்
ஓட்டேரி, ஓட்டேரி, திடீர் நகரைச் சேர்ந்தவர் நெபிசா, 61. கணவரை பிரிந்து வாழும் இவர், தன் இளைய மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார்.
நான்கு மாதங்களுக்கு முன் வீட்டு வாசலில் படுத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல், 19, என்பவர் நெபிசாவின் தலையணையில் தீ வைத்து எரித்துள்ளார். இப்பிரச்னையில் சமரசமாகி உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நெபிசா டிஜிட்டல் பேனரை போர்த்தி துாங்கிக் கொண்டிருந்தபோது, இம்மானுவேல் மற்றும் இருவர் சேர்ந்து பேனருக்கு தீ வைத்துள்ளனர்.
நெபிசாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து மீட்டனர். இது குறித்து தலைமைச் செயலக காலனி குடியிருப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு, இம்மானுவேலை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த சிறுவர்கள் இருவரையும், நேற்று கைது செய்தனர். இவர்கள் மது போதையில் தீ வைத்தது தெரியவந்தது.