ஜெனரேட்டர் தீப்பொறி விழுந்து தேனீர் விடுதியில் தீ விபத்து: சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் தேனீர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை மின் தடை காரணமாக, ஜெனரேட்டர் பயன்படுத்தி வந்துள்ளனர். நண்பகலில், ஜெனரேட்டரில் தீப்பொறி ஏற்பட்டு, கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி கடை முழுவதும் எரிந்தது. அப்பொழுது, கடையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.