வீட்டு வசதி வாரியத்தில் வாங்கிய சொத்துக்கு பட்டா பெற 3 நாள் சிறப்பு முகாம்: மணலி புதுநகரில் நடக்கிறது
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்துக்கு பட்டா பெற சென்னை, மணலி புதுநகர் பகுதியில் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழு தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடம் இருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட
உள்ளது.