செயின் பறிப்பு திருடர்கள் கைது 4.5 சவரன் பறிமுதல்
மதுரவாயல்,வானகரம், போரூர் கார்டனை சேர்ந்தர் இசக்கி, 43; பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், மதுரவாயல் – ஆலப்பாக்கம் பிரதான சாலையில் பைக்கில் சென்றார்.
அவரை இரு நபர்கள் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர்.
இதுகுறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார், ஆவடி, மோரை நியூ காலனியைச் சேர்ந்த அஜய், 22, சஞ்சய், 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், இவர்கள் அம்பத்துார் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 4.5 சவரன் நகைகள், 1,000 ரூபாய், மொபைல் போன், பைக் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், அஜய் மீது கஞ்சா உட்பட மூன்று குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது ஒரு திருட்டு வழக்கும் உள்ளது.